கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது அதனை வீடியோ எடுத்து சர்மிளா அவரது “Instagram” பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக எஸ்.ஐ. ராஜேஸ்வரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C information technoloy act இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெயரை பெற்ற சர்மிளா, தனது இன்ஸ்டா மூலம் பிரபலம் ஆனார். அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். திடீரென அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் சர்மிளாவை அழைத்து அவருக்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார்.
தற்போது அந்த காருக்குள் இருந்த படி தான் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரிவை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.