தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம் வருமாறு:
விஜயகாந்த் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு. அவரது மறைவுக்கு இந்த கூட்டம் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறது.
விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் , மற்றும் கவர்னர்கள், திரையுலக நட்சத்திரங்கள் ரஜினி, கமல், புகழஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி , ராகுல் காந்தி, அரசு மரியாைைதையுடன் நல்லடக்கம் செய்த தமிழக அரசுக்கும், இறுதிஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கும், நெஞ்சம் மறவாத நன்றி தேமுதிக தெரிவித்துக்கொள்கிறது.
விஜயகாந்த் மறைவுக்கு சாதிமத பேதமின்றி அமைதிப்பேரணி மற்றும் புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி.
விஜயகாந்த் விட்டுச்சென்ற கொள்கையை அவர்தம் பாதையில் சென்று வெற்றியடைய அயராமல் உழைத்திடும் பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் துணை நின்று வெற்றி படைப்போம் என்று இந்த கூட்டத்தில் உறுதி ஏற்போம்.
விஜயகாந்த் நினைவிடத்தை கேப்டன் கோவிலாக மாற்றி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு பொதுச்செயலாளரை இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தேமுதிகவினரின் குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள், திருமணநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கேப்டன் கோவிலில் அன்னதானமாகவோ, நலத்திட்ட உதவிகளாகவோ தலைமை கழகத்திடம் முன் அனுமதி பெற்று தங்களின் உதவிகளை செய்ய இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
வரும் 12ம் தேதி அனைத்து கிளைகளிலும் புரட்சி தீபக் கொடி ஏற்றடவும், கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் இந்த கூட்டத்தில் உறுதி ஏற்கப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் நினைவேந்தல் புகழஞ்சலி பொதுக்கூட்டம் நடத்திட இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுச்செயலாளர் பிரேமலதா வுக்கு அதிகாரம் வழங்கி இந்த கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.