தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக தொண்டு நிறுவனம் சார்பில் விவேகானந்தரின் 161 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, மகளிருக்கு கோலப் போட்டி நடத்தப் பட்டு பரிசு வழங்கப் பட்டது. இதில் தேவராஜன், வக்கீல் கண்ணன், நிறுவனச் செயலர் கண்ண தாசன் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.