நீண்ட நாட்களாக சூப்பர் ஹிட் வெற்றிக்காக போராடி வரும் ஹீரோக்களில் ஒருவர் விக்ராந்த். ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும் உதயநிதியின் ‘கெத்து’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ளார். விக்ராந்துடன் இணைந்து விஷ்ணு விஷாலும் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லால் சலாம் படத்தைத் தொடர்ந்து விக்ராந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. டைரி பட இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் விக்ராந்த் நடிக்கிறார்.