அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தலைமை கழகம் சார்பில் ஜனவரி 20 ம் தேதி அன்று பெரம்பலூர் அருகே உள்ள அரியலூர் மாவட்டத்தில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாபொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.இவ்விழாவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார்.
அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜ பூபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை செழியன், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பினர் அனைத்து அணியைச் சேர்ந்த நிர்வாகிகள்,கிளை செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.