கரூர் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் அலுவலக ஊழியர்களை வரிவசூல் பணிகளுக்கு முன்னாள் ஆணையர் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் கரூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற சுதா வரி வசூல் பணிகளிலேயே ஈடுபடுத்தி வருவதாகவும், பணி நேரத்தில் ஊழியர்களை ஒருமையில் பேசுவதோடு, தரக்குறைவாக நடத்துவதாகவும், இலக்கு வைத்து வரி வசூலை தீவிரப்படுத்த கட்டாயப்படுத்துவதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்யும் முடிவுக்கு பல ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அலுலக உதவியாளர் ராஜசேகரி என்பவரை ஆணையர் சுதா நேற்று மாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். எனவே, தங்களுக்கும் இது போல் நடக்க வாய்ப்புள்ளதாக, பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வாயில் முன்பு ஊழியர்கள் சுமார் 30 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்கள் போராட்டத்தின் போது மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மேயர் கவிதா கணேசன் மற்றும் ஆணையர் சுதா ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் மிரட்டும் தொணியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியர்களிடம் பணம் கொடுத்தார் அதற்கு என் பணம் கொடுக்கிறீர்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கூறினார்.