அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் காலணி தெருவைச் சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் வாசு வயது 15. இவர் அங்கு உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மணிகண்டன் உடன் வீட்டில் இருந்து
கடைவீதிக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து ராகுல் என்பவர் உறவினர்கள் உடன் கீழராயம்புரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு திருமண பத்திரிக்கை படைப்பதற்கு வந்து உள்ளனர். இந்த நிலையில் நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதியதியது. இதில் வாசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயம் அடைந்தார்.
இதனைக் கண்ட கிராம மக்கள் காரை அடித்து உடைத்தனர். பின்னர் உடலை வைத்து செந்துறை – அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வருவாய் துறையினர் வந்து சர்வீஸ் ரோடு போடுவதற்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்று தொடர்ந்து 2 மணி நேரமாக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான போலீசார் குவிக்கபட்டு உள்ளதால் இப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.