நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பேச்சுவார்த்தைக் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை குழுக்கள் என்று அமைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளன.
மீண்டும் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் முன்களப் பணிகளை பாஜக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக-அமமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும்அமமுக இருவரும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவிற்கு 2 தொகுதிகளும், ஒபிஎஸ்சுக்கு 1 சீட்டும் வழங்க பாஜ முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தாமரையில் தான் போட்டியிட வேண்டும் என பாஜ கட்டாயப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..