கரூர் – வாங்கல் சாலையில் நரிக்குறவர் காலணி அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊசி மணி பாசி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அண்டை மாவட்டங்களில் இச்சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு அரசு சார்பில் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் கரூர் மாவட்டத்தில் வழங்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்தனர். ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தால் தாட்கோ, தமிழ்நாடு தொழிற் மையம் மூலமாக விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பஞ்சமாதேவி ஐ.ஓ.பி கிளையை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளனர். அங்கு சென்று வங்கியின் மேலாளரை சந்தித்த போது அவர் கடன் வழங்க இயலாது என தங்களை அலைக்கழிப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் தங்களது சமுதாயத்தினருக்கு கொடுத்த நிலையில் இங்கு தர மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டினர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துச் சென்றனர்.
கரூரில் நரிக்குறவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க கோரி மனு…
- by Authour
