மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி தமிழ்ச்செல்வி (51). இவர் மயிலாடுதுறை கூறைநாட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். கடைசியாக கடந்த சனிக்கிழமை வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வி அதன் பின்னர் வெளியில் வரவில்லை. வீட்டில் தமிழ்ச்செல்வி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது உறவினர்கள் போன் செய்தபோது எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வி மர்மமான முறையில் வீட்டுக்குள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலில் இருந்து ரத்தம் தரையில் சிதறி கிடந்ததால் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.