மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்ற தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி இந்த முறை 40க்கு 40 என்ற இலக்கோடு களமிறங்கியுள்ளது. இந்நிலையில், பாஜகவும் தேர்தலுக்காக இன்று 38 குழுக்களை அமைத்தது. பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தேர்தல் நிர்வாகம், தேர்தல் அலுவலகம், கால் சென்டர், புரோட்டோகாலுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* அலுவலக நிர்வாகம், வாகனம், வீடியோ வேனுக்கு தனித்தனி குழுக்களை பாஜக அமைத்தது.
* பா.ஜ.க. தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழுவும் உரையை அச்சிட தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
* மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சாரக்குழு, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரச்சாரக் குழு அமைப்பு.
* தேர்தல் அறிக்கை தயாரிக்க எச்.ராஜா, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
பாஜக மாநில செயலாளர்கள் எஸ்ஜி சூர்யா, அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.