இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 3-வது(நேற்று) நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராலி 29 ரன்களுடனும், ரெஹான் அகமது 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து வீரர்களில் ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து மற்ற விக்கெட்டுகளும் சரியத்தொடங்கியது. மதியம் 2.15 மணிக்கு இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் 2வது டெஸ்டை கைப்பற்றி சமன் செய்துள்ளது. இதில் அஸ்வின் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்னும் கூடுதலாக ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் அஸ்வி்ன் டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திவர்கள் பட்டியலி்ல் இடம் பிடித்திருப்பார். தற்போது அவர் 499 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
ஒரு ரன் அவுட் . குல்தீப், அக்சார், முகேஷ் ஆகி்யோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். தொடக்க ஆட்டக்காரர் ட்ராலி 73 ரன்கள் எடுத்திருந்தார். மற்றவர்கள் அவ்வளவாக ரன்கள் சேர்க்கவி்ல்லை. இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அடுத்த டெஸ்ட் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.