2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியால், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் டோனி 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், நிகழ்ச்சி நடத்திய தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த டிசம்பர் மாதம் விசாரிக்கப்பட்டு , ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளதாக கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மே கூறி் இருந்தனர். இதைத்தொடர்ந்து ஐபிஎஸ் அதி்்காரி சம்பத்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி், சம்பத்குமாரின் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன் டோனிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.