தஞ்சை மாவட்டம், பாபநாசம் கீழ வீதியில் வி.ஏ.ஓ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பொது மக்கள் வந்துச் செல்கின்றனர். இந்த அலுவலக கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மழை நாட்களில் கட்டடத்தின் மேற்கூரை வழியே மழை நீர் கசிகின்றது. இந்த அலுவலகத்தில் டாய்லெட், பாத்ரூம் வசதி இல்லாத காரணத்தால் பெண் வி. ஏ.ஓ க்களால் இந்த அலுவலகத்தில் பணி செய்ய இயலாது. இந்த அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு தரமாக பாத்ரூம், டாய்லெட் வசதியுடன் கட்டித் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. பட விளக்கம்: பழுதடைந்த நிலையில் பாபநாசம் வி.ஏ.ஓ அலுவலகம்.