108 வைணவ தலங்களுள் முதன்மையான, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி பகல் பத்து பெருவிழாவுடன் தொடங்கியது. இன்று காலையுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது. 20 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்களின் எண்ணிக்கை விவரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முக்கிய விழாக்களுக்கு வருகை புரிந்த பக்தர்களின் எண்ணிக்கை விபரம்….
பகல் பத்து முதலாம் நாள் 23.12.2022
33,261 பக்தர்கள் வருகை புரிந்தனர்.
பகல் பத்து இரண்டாம் நாள் 24.12.2022 – 53,149
பகல் பத்து மூன்றாம் நாள் 25.12.2022
50,633
பகல் பத்து நான்காம் நாள் 26.12.2022
48,223
பகல் பத்து ஐந்தாம் நாள்
27.12.2022
49,355
பகல் பத்து ஆறாம் நாள் 28.12.2022
45,960
பகல் பத்து ஏழாம் நாள் 29.12.2022
44,313
பகல் பத்து எட்டாம் நாள் 30.12.2022
43,113
பகல் பத்து ஒன்பதாம் நாள் 31.12.2022
49,326
பகல் பத்து பத்தாம் நாள் மோகினி அலங்காரம் 01.01.2023
81,754
முக்கிய திருவிழாவான பரமபதவாசல் திறப்பு அன்று 2,16,039
ராப் பத்து இரண்டாம் நாள் 03.01.2023
57,307
ராபத்து மூன்றாம் நாள் 04.01.2023
58,818
ராபத்து நான்காம் நாள் 05.01.2023
77,700
ராபத்து ஐந்தாம் நாள் 06.01.2023
85,983
ராபத்து ஆறாம் நாள் 07.01.2023
1,03,440
இராபத்து ஏழாம் நாள் 08.01.2023
1,31,668
ராபத்து எட்டாம் நாள் 09.01.2023
74,550
ராபத்து ஒன்பதாம் நாள் 10.01.2023
82,872
ராபத்து பத்தாம் நாள் 11.01.2023
57,825
20 நாள் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் மொத்தம்
14,45,289 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.