தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் திருச்சி நெ.1 டோல்கேட்-யில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சீர்மரமிப்பினர் நல சங்க தலைவர்கள் தலைமையில் விவசாயிகள், 68 சாதி சமூகத்தினர் இணைந்து நேற்றுஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடைவிதித்தனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற அய்யாக்கண்ணு வீட்டின் முன்பாக அவரையும், அவரது ஆதரவாளர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். 1) 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியம் ரூ.5,000/- வழங்க கோரியும், 2) அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க கோரியும்,
3) மத்திய, மாநில அரசுகளுக்கு DNC, DNT என்று இரட்டை சாதி சான்றிதழ் இருப்பதை ஒரே சாதி சான்றிதழ் DNT-யாக வழங்க கோரியும், 4) சட்டமன்ற தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தப்படி, DNT ஒற்றை சான்றிதழ் தரவேண்டும். அதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கொடுத்த உறுதி மொழியை முதல்வர் நிறைவேற்றி தர கோரியும், 5) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.