கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சிவாயம் அருகே வேலங்காட்டுப்பட்டியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை புதிதாக போடுவதற்கு பழைய சாலையை பறிக்கப்பட்டு ஐந்து மாதங்களாக சாலை போடாததால், மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடுநிலைப் பள்ளி அருகே இரண்டு பேர் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சாலை போடாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி புதிய சாலை அமைத்து தர வேண்டுமென
ஊர் பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு படி இன்று கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகேந்திரன் தலைமையில் வருவாய் துறையினர், நில அளவையர் அளவீடு செய்து கொண்டிருந்தனர்.
இரண்டு பேரின் சுயநலத்திற்காக அரசு அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுக்கு சாதகமாக
செயல்படுவதாக கூறி ஊர் பொதுமக்கள் வட்டாட்சியர் வாகனத்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வட்டாட்சியர் மகேந்திரனை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் அறிந்து குளித்தலை காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதன்பிறகு வட்டாட்சியர் கிளம்பி சென்றார்.
வட்டாட்சியரை மறித்து முற்றுகையிட்டு ஊர் பொதுமக்கள் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.