தமிழக முதல்வர் அவர்கள் ஆணைப்படி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்களுக்கு நடை பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக எட்டு கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி முகாம் தமிழகம் எங்கும் நடைபெற்று வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி நகரின் முக்கிய பகுதி வழியாக இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். ஆனி மேரி சொர்ணா அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்ற முகாமினை அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர். அஜிதா துவக்கி வைத்தார்கள். இம்முகாமில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாம் துவங்கும் இடத்தில் அரியலூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா அவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர், நடைபயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறித்து மருத்துவபரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடத்தினார்கள். இம் முகாமில் ஏராளமான அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..
