நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங்அவர்களின் உத்தரவின் பேரில் கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பல்வேறு நூதன முறைகளில் சாராய கடத்தல் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் அவர்களின்
தலைமையில் வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது காரைக்காலில் இருந்து அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்தனர் அப்போது பெட்ரோல் டேங்கில் சாராயத்தை முழுவதுமாக நிரப்பி இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் செல்வதற்கு தனியாக வாட்டர் பாட்டில் மூலம் செலுத்தி நூதன முறையில் சாராயத்தை கடத்தி வந்தார், விசாரணையில் அவர் பெரும்கடம்பனூரை சேர்ந்த 23 வயதான வீரபாண்டி என்பது தெரியவந்தது அவரை கைது செய்து அவரிடமிருந்து சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.