புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க பாஜக நிர்வாகிகள் கோரியதை அடுத்து ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபரை வேட்பாளராக நிறுத்த பாஜகவுக்கு ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.