பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருச்சி செல்லும் அரசு பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை மகாலிங்கம் (52), என்பவர் ஓட்டி வந்தார்.தண்ணீர் பந்தல் அருகே வந்த போது பேருந்துக்கு முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கீழே இறங்கி பனை மரத்தின் மீது மோதியது. இதில் பனைமரம் அடியோடு சாய்ந்ததுடன், பேருந்தின் முன் பக்கமும் நொறுங்கியது. பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துடனர் சந்திரகுமார் உட்பட பயணிகள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.