அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம் எல் ஏ வுமான துரை சந்திரசேகரன் தலைமையில் தஞ்சை எம்.பி. எஸ் எஸ் பழனி மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், தஞ்சாவூர் எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், கனகவல்லி பாலாஜி, மத்திய மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, மாவட்ட
ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தி கா மாவட்ட தலைவர் அமர்சிங், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில் வேந்தன்,சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் மற்றும் பலர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு தஞ்சை பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். இதேபோல் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கரந்தை பகுதி செயலாளர் அறிவுடை நம்பி, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ், முன்னாள் துணை மேயரும், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான மணிகண்டன், மாவட்ட பொறுப்பாளர் தவமணி, ஒன்றிய செயலாளர் சண்முக பிரபுமற்றும் பலர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.