நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு செய்து இன்று அக்கட்சியின் பெயரை வெளியிட்டார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் இன்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று நாகப்பட்டினத்தில்
விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சுகுமாரன் தலைமையில் குவிந்த அவரது ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, தப்ஸ் மேளம் அடித்து ஊர்வலமாக வந்தனர்
அதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து, பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சி தொடங்கியதை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது விஜயின் புதிய கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் வாழ்க என கோஷங்களை எழுப்பிய அவரது ரசிகர்கள், நடிகர் விஜயின் புகழ் தமிழகம் எங்கும் ஓங்கட்டும் என முழக்கமிட்டனர்.