திருச்சி, உறையூர் பாளையம் பஜார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60) டயர் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி தேன்மொழி. இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று விட்டு திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடை அருகில் காரை நிறுத்தி இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது மெயின் ரோட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் தேன்மொழி அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தேன்மொழியின் கணவர் ரவிச்சந்திரன் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேன்மொழியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.