திருச்சி குமரன் நகர் 15 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (70) சம்பவதன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து மோதிரம், தோடு, சங்கிலி என மொத்தம் 19 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பாத்திரங்கள், 10 ஆயிரம் ரூபாய் பணம்ஆகியவற்றை திருடிக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிறகு மறுநாள் வீட்டுக்கு வந்து தியாகராஜன் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட் D அதில் இருந்த நகை பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது இதை அடுத்து தியாகராஜன் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜன் வீட்டில் 19 பவுன் நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.