திருச்சி, நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேலைக்கு வந்த எடமலைபட்டிபுதூரை சேர்ந்த திலகா என்பவர், தினேஷ்பாபு டூவீலர் சீட் லாக்கரில் வைத்திருந்த ரூ. 5. 65லட்சம் பணத்தினை திருடி சென்றுள்ளார். இது குறித்து தினேஷ்பாபு நவல்பட்டு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், திலகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரின் பணத்தினை பறிமுதல் செய்தனர்.
