சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ’கங்குவா’ திரைப்படம் பான் இந்திய அளவில் 5டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தைத் தயாரிக்கிறார்.
’கங்குவா’ என்றால் நெருப்பின் கங்கு போல கோபமும், வீரமும் உடைய வீரன் என்று அர்த்தம் வரும் என படத்தின் தலைப்பை அறிவித்து படக்குழு தெரிவித்திருந்தது. படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ், முதல் லுக் போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்காக, மணிக்கணக்கில் சூர்யா மேக்கப் போட்டதாகவும் சொல்லப்பட்டது.
சமீபத்தில், ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூர்யா முடித்து விட்டதாக அறிவித்தார். இதற்கடுத்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்க உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் நடிகர் சூர்யா தனது ஸ்டைலிஷான புது தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
இந்தப் புகைப்படத்தையும் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘கங்குவா’ படப்பிடிப்பிற்குப் பிறகு எடுத்தப் புகைப்படம் இது’ எனத் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கையில் டாட்டூவுடன் பிளாக் அண்ட் வொயிட்டில் சூர்யா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்கவிட்டு வருகின்றனர்.