மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள்,பெண்களுக்கானது. மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை கொடுக்கும்” என்றார்.