திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி வாழவந்தான்கோட்டை கடைவீதியில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலைக்கார சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இன்று தமிழ்நாடு முழுவதும மாவட்ட தலைநகரங்களில் அத்ிமுக நடத்தி்யது.
வாழவந்தான்கோட்டையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மா.செ.ப.குமார் பேசியதாவது: பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையையும் பட்டியலின மக்களை தொடர்ந்து ஏளனமாக பேசிவரும்
திமுக அரசு மற்றும் பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை . அதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.