தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காக 1 லட்சத்து 38 ஆயிரத்து 427 எக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 493 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
தற்சமயம் அறுவடை செய்யப்படும் நெல் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல்கொள் முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 421 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 24 ஆயிரத்து 832 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5,123 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.57 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பா பருவத்தில் 620 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நுகர்பொருள் வாணிபக்கழக தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.