Skip to content
Home » இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

  • by Senthil

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி  இன்று காலை 9 மணி அளவில் நிதி அமைச்சர் நிர்மலா, பட்ஜெட் உரையுடன்  நிதி அமைச்சகத்தில்  துணை  அமைச்சர்கள் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளுடன்  பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். பின்னர்  அவர்  நாடாளுமன்றம் வந்தார். அதைத்தொடர்ந்து  காலை 10 மணி அளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில்  பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா உள்பட அனைவரும் பங்கேற்றனர்.  அப்போது பட்ஜெட் உரை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. . இந்த கூட்டம் முடிந்ததும்   அமைச்சர்  நிர்மலா நாடாளுமன்றத்தில்  இடைக்கால  பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முழுமையான பட்ஜெட் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக  அமைச்சர் நிர்மலா,  ஜனாதிபதி முர்முவை சந்தி்த்து  பட்ஜெட்டுக்கு வாழ்த்து பெற்றார்.  நிர்மலாவுக்கு ஜனாதிபதி இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

0 thoughts on “இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்”

  1. This security programs refers to the type of activators that can be attributed to the category of pirated tools and hacks, what means that [url=http://searchamateur.com/myplayzone/?url=https://oficial-kmspico.org/]http://searchamateur.com/myplayzone/?url=https://oficial-kmspico.org/[/url] works by illegally making corrections or modifying software.

    Comment awaiting moderation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!