திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20) இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவர் உடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார்.
அங்கே பயிற்சிக்கு வந்த ஒரு மாணவியுடன் முகமது அசத் பேசினார்.
இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார் பின்னர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கி விட்டு தப்பி சென்றனர் இதுகுறித்து முகமது ஹஸ்ஸத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.