திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில்குடமுழுக்கு நடைபெற்ற 7 ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மஹா நவசண்டி ஹோமம் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்கலில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும், சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாகவும் விளங்குகிறது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும்.
இத்திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற 7 ம் ஆண்டை முன்னுட்டு ஸம்வத் சராபிஷேகம்
மற்றும் நவசண்டி ஹோமம் நடைபெற்றது.
இந்த விழாவில் மஹாநவசண்டி ஹோம்ம் , விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவி ஆவாஹணம், வடுக பூஜை, சுமங்கலி பூஜை,உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து
மூலிகை பொருட்கள், பழங்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு நவசண்டி ஹோமமும், திரவியாஹூதியும், மஹாபூர்ணாஹூதியும் நடைபெற்றது.
தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு திருக்கோவிலை வலம் வந்து மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. உற்சவ அம்மன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.