புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் செயல்பாடுகளை ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து டான்கோ திட்டத்தின் கீழ் லெப்பை மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 8.46 லட்சம் மதிப்பில் கடனுதவித் தொகைகளை வழங்கினார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத், அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் ஆறுமுகசாமி, கூட்டுறவு சார்பதிவாளர் கோ.அன்னலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.