தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் டெல்லி அனுப்ப சாகுவின் தனி செயலாளர் தபால் நிலையம் சென்றபோது காணாமல் போனதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.