Skip to content
Home » தஞ்சையில் தேசிய தொழுநோய் தினம்- விழிப்புணர்வு முகாம்…

தஞ்சையில் தேசிய தொழுநோய் தினம்- விழிப்புணர்வு முகாம்…

  • by Authour

மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசியதாவது: தொழு நோயாளிகளை எப்பொழுதும் ஒதுக்க கூடாது. அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல் நோய் உள்ளவர்களையோ அல்லது தொழு நோயால் உடல் குறைபாடு உள்ளவர்களையோ பார்த்தால் அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இக்காலகட்டத்தில் தொழுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது இருப்பினும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தொழு நோயை முழுமையாக ஒழிக்க வேண்டும். மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம், மருத்துவ

கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, நிறைய மருத்துவ அலுவலர் செல்வம், துணை நிலைய மருத்துவர்கள் முகமது இத்ரீஸ், மாதேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் நோயாளிகளுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் இலவச பாத அணிகலன்கள் மற்றும் ஒரு வருடத்திற்குரிய மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் தொழுநோய் கருத்தரங்கம் நடந்தது. மருத்துவ மாணவர்கள், ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நாடகம் ,தொழுநோய் வினாடி வினா நிகழ்ச்சி போன்றவை நடந்தது. ஏற்பாடுகளை தோல் நோய் துறை துணை பேராசிரியர் டாக்டர் ஜெயந்தி செய்திருந்தார். முன்னதாக அனைவரும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *