தொட்டியபட்டி அரசு பள்ளி வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தீண்டாமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என உளமாற உறுதி அளிக்கிறேன் எனக் கூறி பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.