ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்ததை அமல்படுத்த வேண்டும், ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஆகியவற்றை அமல்படுத்த வண்டும்., ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ சங்கத்தினர் இன்று அனைத்து மாவட்ட தைலநகாரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையத்தில் இந்த மறியல் நடந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1000 பேர் இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது போலீசாருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனை அடுத்து போலீசாரை மீறி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அடுத்து மறியலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலம் வரை ஊதியம் பெரும் அனைவருக்கும் காலம் வரை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உரிமையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை காலம் வரை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 500க்கும் மேற்பட்ட வர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து நாகூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அரியலூரில் அண்ணாசிலை முன் நடந்த மறியலில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் நடந்த மறியலில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையிலு் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் நடந்ததினர். இதனால் கச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர். ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
இதுபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. கோரிக்கை நிறைவேறும் வரை அடுத்தடுத்த கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளனர்.