புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், இணை இயக்குநர் ( மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ஸ்ரீபிரியா தேன்மொழி, துணை இயக்குநர் எஸ்.சிவகாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.