திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகர செயலாளர் மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த உறுதிமொழிஎற்பு நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு மதவெறியை வாய்ப்பு மனித நேயம் காப்போம் வாழ்க அண்ணல் காந்தியின் புகழ் என்ற முழக்கத்துடன் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் மண்டல குழு தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.