தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேவையில்லா பொருட்களை எரிப்பது தமிழர்களின் வழக்கம், அவ்வாறு எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் .இதை தவிர்க்கும் விதமாகபுகையில்லாமல் போகி பண்டிகை விழாவை கொண்டாட ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் போகியன்று திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்த்து நகராட்சியிடம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர் மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேரணியாக புறப்பட்டனர் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி ,நகர் மன்ற துணைத் தலைவர் எஸ் எஸ் குமார் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.