Skip to content

குமரி கொலை வழக்கு.. நாகை கோர்ட்டில் திமுக நிர்வாகி சரண்… சரண்…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் அரசு போக்குவரத்துக் கழகத்தின் மெக்கானிக்காக பணியாற்றி வருகிரார்.இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆகவும் உள்ளார்.

மயிலோடு புனித மிக்கில் முதன்மை தூதர் ஆலய பங்கு உறுப்பினராக உள்ள சேவியர் குமாரின் மனைவி ஆலய நிர்வாகத்தின் இயங்கும் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் ..

ஆலயம் மற்றும் மேல்நிலைபள்ளி பாதிரியார் ராபின்சன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் சேவியர் குமார் ஆலயம் மற்றும் பள்ளியின் வரவு செலவு கணக்குகள் பாதிரியாரிடம் நேரிலும், ஊர் மக்கள் whatsapp குழுவிலும் கேள்வி கேட்டு  போடுவதை வாடிக்கையாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிரியார் ராபின்சன் கடந்த 19ஆம் தேதி சேவியர் குமாரின் மனைவி ஜெமினியை பள்ளி ஆசிரியர் பணியில் இருந்து பணி நீக்கம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சேவியர் குமாரை தனது இல்லத்திற்கு  அழைத்து தனது ஆதரவாளர்களான தக்கலை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர்  ரமேஷ் பாபு உட்பட  ஆதரவாளர்கள் சேவியர் குமாரை அயன் பாக்ஸ் ஆல் அடித்து கொலை செய்துள்ளனர் இதுகுறித்து ராபின்சன் மற்றும் ரமேஷ்பாபு உட்பட 13 பேர் மீது ஒன்பது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது..

இந்தநிலையில் தலைமறைவான குற்றவாளிகளை ஆறு தனிப்படைகள் அமைத்து தேடி வந்துள்ளனர்.. ஏற்கனவே இரண்டு பேர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பாதிரியார் எற்கனவே ராபின்சன்  திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி வரதராஜன் முன்னிலையில் சரணடைந்துள்ளார்..

இந்நிலையில் இன்று வழக்கில் முதல் குற்றவாளியான வழக்கறிஞரும்,திமுக தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த தலைமறைவான ரமேஷ்பாபு நாகப்பட்டணம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். JM.1 நீதிமன்றத்தில் சரணடைந்த அவரை பிப்.1 வரை நீதிமன்ற காவலில் நாகை

சிறையில் அடைக்க நீதிபதி சுரேந்தர் உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான இவர் நாகை நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!