தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் பற்றிய கடிதம் எழுதும் போட்டியில் விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11- ம் வகுப்பு பயிலும் அ. ஏஞ்சல் வர்ஷா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் 38 மாவட்டங்களில் இருந்து மாணவர்களின் படைப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டதில் மாநில அளவில் 10 வது இடத்தினை பெற்றார். அதனைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஏஞ்சல் வர்ஷாவை பாராட்டி கேடயம், பாராட்டுச்சான்றிதழ்,
ரூ 1000 ரொக்கப்பரிசு, புத்தகம் பரிசாக வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஏஞ்சல் வர்ஷா புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதன்மைக்கல்வி அலுவலர் மாணவியை பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜூ, பள்ளியின் தலைமையாசிரியை கே. ஜெயந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.