கரூர், தான்தோன்றிமலை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சொந்தமாக 43.59 ஏக்கர் மதிப்பிலான நிலம் உள்ளது அதனை கரூர் பெரியாண்டாங் கோயில் பகுதியைச் சேர்ந்த வணங்காமுடி என்பவர் வாங்கிக் கொள்வதாக சொல்லி ரூ. 18 லட்சத்திற்கு பேசி முடிக்கப்பட்டு முன்பணமாக மூன்று லட்சம் தந்துள்ளார். இதை நம்பிய சங்கர் நிலத்தினை வணங்காமுடி பெயரில் கிரயம் செய்து கொடுத்துள்ளார். மீதி பதினைந்து லட்ச ரூபாய் தருகிறேன் என்று கூறியவர், பல வருடங்களாகியும் தராமல்
ஏமாற்றி விட்டதாக கூறி.. சங்கர் மற்றும் அமுதா ஆகியோர் இது குறித்து லாலாபேட்டை காவல் நிலையம் கரூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட எஸ்பி அலுவலகம் என பல இடங்களில் பல தடவை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை விரக்தி அடைந்தவர்கள் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமுக்கு வந்தவர்கள், திடீரென தாங்கள் கொண்டு வந்த மன்னனையை தங்கள் மேல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அருகில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து காப்பாற்றி விசாரணைக்காக தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.