மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேலமங்கைநல்லூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கிஷோர் என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு இன்று காலை குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டு பகுதியில் கிஷோரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.