பெரம்பலூர் அருகே குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி நாட்டார் மங்கலம் ஜேஜே காலனியை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டார்மங்கலம் ஜேஜே காலனியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுயில் கடந்த ஆறுமாதங்களாக முறையாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது
மேலும் அப்பகுதியில் இரு நாட்களுக்கு ஒரு முறை கிணற்று நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவற்றை குடிக்க முடியாமல் குடிநீருக்காக பல தூரம் சென்று காவிரி குடிநீரை எடுத்து வருவதாகவும் குடிநீர் இல்லாமல் குழந்தைகளை வைத்து சிரமப்படுவதாகவும் கூறி
நாட்டார் மங்கலம் ஜேஜே காலனியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் பெரம்பலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை சந்தித்து மனு அளித்தனர்