சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீடு குழு தலைவருமான டி.ஆர்.பாலு , “மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக- காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவும் இல்லை. திமுகவும் கேட்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு உதயநிதி வாய்ப்பு கேட்டதில் தவறில்லை. உதயநிதி கேட்டதுபோல் இளைஞர்களுக்கான வாய்ப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பேன். 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்ற டிஆர் பாலுவிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இணைய உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, “தெரியவில்லை” என்றார்.