திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் புனித வனத்து அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிகட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து அடங்க மறுத்த காளைகளை ஆர்வத்துடன் அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர்கள் தங்கக்காசு வெள்ளிக்காசு கட்டில், சில்வர்குடம்,அண்டா,
சைக்கிள், ஹெல்மெட் சேலை மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுகளை பரிசாக வழங்கினார்கள்
அடங்காமல் களத்தில் ஆர்ப்பரித்த காளைகள் சில தனது எஜமானரான உரிமையாளருக்கு பரிசு வாங்கிக் கொடுத்தன.
இந்தஜல்லி கட்டு விழாவில் திருச்சி,புதுக்கோட்டை,
திண்டுக்கல்,மதுரை, சிவகங்கங்கை உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகளும்,275- மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி விழாவை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 34 பேர் காயமடைந்தனர்..