இயக்குனர் எழில் டைரக்ஷனில் விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் தற்போது வெளியாகும் படங்களையும், அதன் இயக்குனர்களையும் சரமாரியாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர், “சமீபத்தில் ஒரு படம் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே அதன் பர்ஸ்ட் காப்பியை பார்த்தேன். அந்த படத்தை பார்த்துவிட்டு அப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு போன் செய்தேன். அவரிடம் முதல் பாதி நன்றாக இருக்கிறது. ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை முதல் பாதியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டாம் பாதி சரியாக இல்லை. முதல் பாதி அளவிற்கு என்னை ஈர்க்கவில்லை. தந்தையே பெற்ற பிள்ளையை கொல்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினேன். அதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த அவர் உடனே, ‘சார் நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார். அதன்பிறகு அவர் போன் செய்யவே இல்லை. மேலும் படம் வெளியான பிறகு நான் என்ன கருத்தை சொன்னேனோ அதைத்தான் ரசிகர்களும் விமர்சித்தனர். எஸ்ஏசி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எஸ்.ஏ சந்திரசேகர் லியோ படத்தைதான் விமர்சிக்கிறார் என கமெண்ட் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்…