12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் கலெக்டராக ஆர். பிருந்தா தேவி, திருப்பத்தூர் கலெக்டராக தர்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செங்கல்பட்டு கலெக்டராக அருண்ராஜ், தென்காசி கலெக்டராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வேலூர் கலெக்டராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அது தவிரத் திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வேளாண் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் கலெக்டர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குநராகவும், தென்காசி கலெக்டர் இருந்த ரவிச்ந்திரன் உயர் கல்வித் துறை துணை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.